|
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. ('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை.
இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின் ; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற்போதும் , வேறுதுணை வேண்டியதில்லை .
மனத்திண்மையில்லாவிடத்து , இடமும் பிறவும் வாய்த்தும் பயனின்மையின் , அஞ்சாமையை இன்றியமையாத பெருந்துணையாகக் கூறினார் .
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அச்சமற்ற வீரனுக்கும் தக்க இடம் வேண்டும்.) அஞ்சாமை இருந்தால் போதும், வேறு துணை வேண்டியதில்லை என்பவர் களுக்கும் சரியான பாதுகாப்புள்ள இடம் அமைந்தால் அந்த அஞ்சாமை குறையாமல் இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவரிடத்தில் தொழில் செய்யும் திறங் களில் குறையாமல் எல்லாவற்றையும் எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வாராயின், அச் செயலுக்குத் தமது மனத்தின திண்மையல்லாமல் வேறு துணை வேண்டுவதில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நன்கு திட்டமிட்டு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்பட முற்படும் போது அஞ்சாமையைத் தவிர்த்து வேறு துணை வேண்டியதில்லை.
|
|
Translation
|
|
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.
|
|
Explanation
|
|
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.
|
|
Transliteration
|
|
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|