|
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இடன் அறிந்து போற்றி - தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு , போற்றார்கண் செயின் - பகைவரொடு போர்வினை செய்வராயின் ; ஆற்றாரும் ஆற்றி அடுப - வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர் .
தம்மைக் காத்தல் , பகைவரால் , துன்பம் தோல்வி கேடுகள் வராமல் அரணாலும் படையாலும் தம்மைக் காத்துக் கொள்ளுதல் . தம்மை என்பதும் போர்வினை என்பதும் அவாய் நிலையான் வந்தன . உம்மை இழிவு சிறப்பு .
|
|
கலைஞர் உரை:
|
|
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்
காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும்
வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பாதுகாப்புள்ள இடத்தின் சிறப்பால் ஆற்றலும் அதிகப்படும்.) காரியத்தைக் கெடுத்துவிடக்கூடிய பகைவர்கள் வர முடியாத பாது காப்புள்ள இடத்தைத் தெரிந்து அதிலிருந்துகொண்டு காரியத்தைச் செய் தால் திறமையில்லாதவர்களும் திறமையுடன் வெற்றியடையவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வலிமை இல்லாதவர்களும் வலிமையுடையவராகி வெல்லுவார்கள். எப்போது என்றால், அதற்குத் தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடம் வினைகளைச் செய்வார்களானால் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உரிய இடத்தைத் தேர்ந்து கொண்டு போர் புரியக் களம்புகுந்தால் மிக்க படைவலிமை இல்லாரும் கூட வெற்றி பெற வாய்ப்புண்டு.
|
|
Translation
|
|
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.
|
|
Explanation
|
|
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.
|
|
Transliteration
|
|
Aatraarum Aatri Atupa Itanarindhu
Potraarkan Potrich Cheyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|