|
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
இதுவுமோரெண்ணம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் .
இன் சொல்லுங் கொடையும் , ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி , எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவது மாயிருத்தலின் , நல்லாம்புடைகளாம் . அவற்றை அவரவர் பண்பறிந்தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியாரல்லாதாரிடத்துக் கையாளுதல் . 'தவறு' அவ்வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை .
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச்
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காரியம் ஆரம்பிப்பதற்கு முன்னால்மட்டும் அல்லாமல் காரியம் முடிந்த பின்பும் தெரிந்து செய்யவேண்டியவை உண்டு.) காரியம் நன்றாக முடிப்பதிலும் அதற்குச் சம்பந்தப் பட்டவர்களுக்கு அவரவர்களுடைய குணமறிந்து தக்கபடி செய்வன செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்கேற்பச் செய்யாமற் போனால், பிறர்க்கு நல்லவற்றையே செய்தாலும் குற்றம் உண்டாகிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவரவர் பண்பு நலன்களைஅறிந்து அதற்கேற்றவாறு உதவிகள் செய்யாக்கால், நன்மை என்றெண்ணி செய்வதும் தவறாகிப் போகும்.
|
|
Translation
|
|
Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.
|
|
Explanation
|
|
There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.
|
|
Transliteration
|
|
Nandraatra Lullun Thavuruntu Avaravar
Panparin Thaatraak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|