|
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. (முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை -முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் (இலாபமும்) இல்லை; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போல, தம்மொடு சேர்ந்து தம்அரசை, முட்டுக்கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் ஏற்படும் நிலைபேறும் இல்லை.
ஊதியப்பேற்றிற்கு முதலீடு போல அரசு நிலைபேற்றிற்கு அமைச்சுத்துணை இன்றியமையாததென்பதாம். இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை யணி.பொருளாக வந்த தொடர் ஒருமருங் குருவகம். ஆகவே, இணையணியாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய
துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய்
இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பெரியவர்களுடைய ஆதரவு, வியாபாரிக்கு மூலதனம் போலவும் குழந்தைக்குத் தாயின் அணைப்புப் போலவும் உதவுவது. மூலதனம் இல்லாத வியாபாரிக்கு இலாபம் இல்லை. குழந்தையை அணைத்து ஆறுதல் செய்து அறிவு சொல்லும் தாய் போன்ற பெரியவர்களுடைய ஆதரவில்லாதவர் களுக்கு நல்ல நிலைமை இருக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முதற்பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும். அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முதலீடு இன்றி தொழில் செய்வார்க்கு வருமானம் இல்லை.அதுபோல் வழிகாட்டும் துணை இல்லாதவர்களுக்கு வையத்தில் நிலைத்த வாழ்க்கை இல்லை.
|
|
Translation
|
|
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.
|
|
Explanation
|
|
The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
|
|
Transliteration
|
|
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|