|
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே -அரசர் பெறக்கூடிய அரும்பேறுக ளெல்லாவற்றுள்ளும் அரியதாம்.
ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்
எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பெரியவர்களை அண்டி அவர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக இருக்கும்படி செய்து கொள்வது பெறுதற்கருமையான பாக்கியங்களி லெல்லாம் மிகவும் பெரிய பாக்கியம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிவில் சிறந்த பெரியவர்களைப் பேணி மதித்து அவர்களைத் தம்முள் ஒருவராக ஆக்கிக் கொள்ளுதல் சிறந்த ஆளுமை யாகும்.
|
|
Translation
|
|
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.
|
|
Explanation
|
|
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
|
|
Transliteration
|
|
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|