|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
|
|
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்
இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்-ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்-அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன்.
உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். 'உள்ளத்தான்' என்பது வேற்றுமை மயக்கம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்
மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சொல்லுவது வாய்மையா அல்லவா என்பதற்கு மனச் சாட்சிதான் அளவுகோல். ஆதலால்,) மனச்சாட்சிக்குப் பொய்ய னாகாமல் நடந்து கொள்ளும் ஒருவன் உலகிலுள்ள மற்றெல் லாராலும் மதிக்கப்படுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் தனது மனதறியப் பொய் கூறாமல் நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் உள்ளவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் தன் உள்ளத்தால் பொய்மை இல்லாமல் வாழ்ந்தால், அவர் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் வைத்துப் போற்றப்படுவார்.
|
|
Translation
|
|
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
|
|
Explanation
|
|
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
|
|
Transliteration
|
|
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|