|
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்.
இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல - பொருள்களின் இயல்பை உள்ளவாறறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல்போல; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.
பழக்கம் நிலைத்து நிற்கும் இயல்பினதென்பதும், பொருள்களின் இயல்பை அளந்தறிதல் துறவறத்திற்கு இன்றியமையாத தென்பதும், இங்குக் கூறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர்
நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) அளவோடு வாழத் தெரிந்தவர்களிடத்தில் அவர்கள் மேற்கொண்ட அற உணர்ச்சி இருந்து கொண்டே மிருக்கும். அளவுக்கு மீறிய வாழ்க்கையால் திருட நினைக்கிற வர்களுடைய மனத்தில் அந்த அற உணர்ச்சி மறைந்து விடுகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயிர் முதலானவற்றை அளக்கும் தவத் தினைப் பயின்றவர்கள் நெஞ்சத்தில் அறம் நிலை பெற்று நிற்கும். களவினையே பயின் றவர் நெஞ்சத்தில் வஞ்சனை நிலை பெற்று நிற்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
திருடிப் பழகியவர் நெஞ்சில் வஞ்சகம் குடியிருப்பது போல, அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம் தங்கியிருக்கும்.
|
|
Translation
|
|
As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.
|
|
Explanation
|
|
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.
|
|
Transliteration
|
|
Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|