|
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர'் எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இலர் பலர் ஆகிய காரணம்-இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர்-தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.
'கேடில் விழுச்செல்வங் கல்வி" (400) என்று ஆசிரியரே கூறுவதால், இங்குக் குறிக்கப்பட்ட செல்வ வறுமைகள் கல்வி பொருள் என்னும் இருவகைச் செல்வத்திற்கும் பொதுவாம். 'நோற்பார் சிலர்' என்னும் கரணியத்திற்குரிய கருமியம் கூறப்படாமையால் வருவித்துரைக்கப்பட்டது. இம்மை நிலைமையினின்று முன்னை வினைப்பயனுக்குக் கரணியம் உய்த்துணரப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி
கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி சித்தி பெற்றவர்களை நாம் அதிகம் காண்பதில்லையே எனில்) அப்படிப்பட்டவர்கள் பல பேர் உலகத்தில் இல்லையென்பதற்குக் காரணம் துறவு பூண்டு தவம் செய்வதாகச் சொல்லுகின்றவர்களிலும்கூட மேற்சொன்ன முறையில் சரியான தவம் செய்கிறவர்கள் வெகு சிலரே. அப்படிச் செய்யாத துறவிகளே பெரும்பான்மையோர்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உலகத்தில் செல்வந்தர்கள் சிலராகவும் வறுமை யாளர்கள் பலராகவும் இருப்பதற்குக் காரணம் யாதென் றால், தவம் செய்வார் சிலராகவும் செய்யாதவர்கள் பல ராகவும் இருப்பதேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தவவொழுக்கம் மேற்கொள்பவர் சிலர், மேற்கொள்ளாதவர் பலர், எனவே தான் ஆற்றல் மிக்கவர் சிலராகவும் குறைந்தவர் பலராகவும் இங்கு வாழ்கின்றனர்.
|
|
Translation
|
|
The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.
|
|
Explanation
|
|
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
|
|
Transliteration
|
|
Ilarpala Raakiya Kaaranam Norpaar
Silarpalar Nolaa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|