|
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்.
அஃதாமாறு பின் கூறப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எனைப் பகை உற்றாரும் உய்வர்-எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும்.
தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்
செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து
வருத்திக்கொண்டே இருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) எப்படிப்பட்ட பகைவர்களிடத்திலும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் தீவினைப் பயன் என்ற பகை நாம் எங்கே போய் ஒளிந்தாலும் நம்மை விடாமல் பின் தொடரும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எத்தகைய பகை உடையாரும் அதிலிருந்து மீள முடியும். ஆனால் தன் செயல்களே தனக்குப் பகையாகித் தாக்கும் போது அவற்றிலிருந்து மீள்வது அரிது.
|
|
Translation
|
|
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.
|
|
Explanation
|
|
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
|
|
Transliteration
|
|
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|