|
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.
இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - அறிவுடையோர் நேர்மையில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று.. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம்.
இது நேர்மையில்லாச் சொல்லை நெருக்கடி நிலைமையிற் சொல்ல இசைவளித்ததன்று; நேர்மையில்லாச் சொல்லினும் பயனில்லாச் சொல் தீயதென்பதை உணர்த்துவதேயாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்;
ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) அறிவொழுக்கங்களாற் சிறந்தவர்கள், பிறரைக் கண்டிக்க, அன்பில்லாத வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லுவார்கள்; ஆனால் வீண் வார்த்தைகளைப் பேசமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக; பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செழுமை குறைந்த சிறப்பேதும் இல்லாத சொற்களைப் பேசினும் பேசுக; யாதொரு பயனும் இல்லாத சொற்களைப் பேசாதிருத்தல் நன்று.
|
|
Translation
|
|
Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.
|
|
Explanation
|
|
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
|
|
Transliteration
|
|
Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|