Thirukural

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல். இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(முற்றிலும் மறந்து விடுவது கடினம். மன்னிப்பதற்கு மனப் பெருமை வேண்டும்.) மனப் பெருமை இல்லாமையிலும் இல்லாமை, விருந்தினரை உபசரிக்காமல் விட்டுவிடுதல். மனப்பெருமையின் வல்லமையிலும் வல்லமை, அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட தீமைகளைப் பொறுத்து மன்னித்து விடுதல்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களை பொறுத்துக்கொள்ளுவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
வறுமையுள் வறுமை விருந்தினரைப் பேணாமல் தவிர்த்தல், வலிமையுள் வலிமை அறிவிலார் செயலைப் பொறுத்துக் கொள்ளுதல்.
Translation
The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.
Explanation
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
Transliteration
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp Porai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 153