|
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம்.
இஃது உயர்ச்சியில்லையா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை - ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு இல்லை . உயர்வு உயர்குலத்தானாதல் .
|
|
கலைஞர் உரை:
|
|
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும்
வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறப்பின் மேன்மை மட்டுமல்ல;) பொறாமை உள்ளவ னுக்குச் செல்வம் சேராது; சேர்ந்தாலும் நிலைக்காது; அதுபோல ஒழுக்கமில்லாதவனுக்கு மேன்மை இருக்காது; இருந்தாலும் தங்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொறாமைப் பண்பு உடையவரிடம் செல்வம் நிலைத்திருக்காது. அதுபோல ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வில் மேன்மை என்பதே இல்லை.
|
|
Translation
|
|
The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.
|
|
Explanation
|
|
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
|
|
Transliteration
|
|
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai
Ozhukka Milaankan Uyarvu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|