Thirukural

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.
தேவநேயப் பாவாணர் உரை:
பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.
கலைஞர் உரை:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என் விருப்பத்தை மதிக்காமல் தாம் விரும்பியபடியே தாமதித்து வந்தவரானாலும் அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்க ஆசைப்பட்டு என் கண்கள் அமைதியாக இருக்க மறுக்கின்றன.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நம்மை விரும்பாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும் தலைவனை எனது கண்கள் பார்க்காமல் இருக்கமாட்டா.
தமிழ்க்குழவி உரை:
என்னைப் பேணி அன்பு செய்யாராய் தன் விருப்பப்படியே நடந்து கொள்வாராயினும் காதலரைக் காணாமல் என் கண்கள் அமைதி பெறுவதில்லை.
Translation
Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see.
Explanation
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
Transliteration
Penaadhu Petpave Seyyinum Konkanaik Kaanaa Thamaiyala Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1283