|
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.
நிலை- வன்னாச்சிரம தன்மம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி; மலையினும் மாணப் பெரிது - மலையுயர்ச்சியினும் மிகப் பெரிது.
மலை யென்பது வளமிகுந்ததாதலின், குட மலையும் பனி (இமய) மலையும் போல்வதாகும். உம்மை உயர்வு சிறப்பு. ' நிலையிற்றிரியா தடங்குதல்' ஐம்புலவின்பமும் நுகர்ந்து கொண்டே அடங்கியொழுகுதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும்
கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அடங்கியிருப்பதென்றால்,) தன்னுடைய கொள்கையை விட்டுவிடாமல் பிறரிடம் தணிவாகப் பேசி அடங்கி நடந்து கொள்ளுகிறவனுடைய புகழ் மலையைவிட மிகப் பெரிதா ன தோற்றமுண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கப் பண்புடன் வாழும் ஒருவருடைய தோற்றம் மலையை விட உயர்ந்ததாகும்.
|
|
Translation
|
|
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.
|
|
Explanation
|
|
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
|
|
Transliteration
|
|
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|