|
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மாயா என் உயிர்- இதுவரை காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடா திருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும்- இன்று பொருளியல்பையே தமக்கு இயல்பாக வுடையவரை நினைந்து இம் மயங்கும் மாலைப் பொழுதில் இறந்து படுவதாகும். குறித்த பருவங் கடந்தும் பொருண் முடிவு கருதி வராமையின், சொன்ன சொல்லை நிறைவேற்றுந் தம்மியல் பொழிந்து பொருளியல் பையே தம்மியல்பாகக் கொண்டவரை நினைந்து இனியாற்றிப் பயனில்லை. ஆதலால், இனி நீ ஒன்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பொருள் சம்பாதிக்கும் முறையில் என்னைப் பிரிந்து போயிருக்கிற காதலர் வந்துவிடுவார் என்ற ஆசையால் மாயாமல் இருந்துகொண்டிருக்கிற என் உயிர், என்னை நடுங்கச் செய்கிற இந்த மாலைப்பொழுதால் மாய்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் பிரிவைப் பொறுத்து இறந்து போகாதிருந்த எனது உயிர், இன்று பொருளீட்டுவதனையே தமக்கு இயல்பாக உடைய கணவரை நினைத்து மயங்குகின்ற இம்மாலைப் பொழுதில் மாய்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருள் கருதி என்னைப்பிரிந்த காதலரை நினைத்து அன்று உடன் போகாத என்னுயிர், இந்த மாலைப் பொழுது தரும் துன்பத்தால் மாய்கிறது.
|
|
Translation
|
|
This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.
|
|
Explanation
|
|
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
|
|
Transliteration
|
|
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|