Thirukural

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதற்கு முன்பு நானே மதிமயங்கி நோய்த்துன் புற்றேன்.) மதி மருண்டு மாலை படர் தரும் போழ்து- இன்று, கண்டாரெல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும் பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும்- இந்நகர் முழுதும் மயங்கி நோய்த் துன்புறும். மதி மருள என்பது ' மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. பதி முழுதும் துன்புறுவதால் யான் இறந்து படுவேன் என்பதாம். மாலை மயங்கி வரும் போழ்து என் பதி நிலை கலங்கி நோயுழக்கும் என்று ரைப்பார் மணக்குடவ பரிப்பெருமாளர்.
கலைஞர் உரை:
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) மாலைப் பொழுதை நினைத்தாலுங்கூட என் அறிவு கலங்கி, இருக்கிற இடம் தடுமாறும்படி துன்பம் உண்டாகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முன்பெல்லாம் யான் மட்டும் மதி மயங்கி இருந்தேன். இப்போது கண்டவர்களும் மதிமருளும் வகையில் மாலைக்காலம் வரும்போது, இவ்வூரெல்லாம் மயங்கி நோயினை அனுபவிக்கும்.
தமிழ்க்குழவி உரை:
அறிவு மயங்க வருகின்ற இந்த அந்தி மாலைப் பொழுது இந்த ஊரையும் மயங்க வைத்துப் பெருந்துன்பம் தருகிறது.
Translation
If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend.
Explanation
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.
Transliteration
Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu Maalai Patardharum Pozhdhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1229