|
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகன் தூதுவரக் காணாது வருந்துந் தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாமிருவரும் வேறல்லமென்று சொல்லுவாரின் அன்பின்மையை மிகவும் நினைந்து; என் இன் உயிர் விளியும் - எனது இனிய வுயிர் இன்று என் உடம்பை விட்டுப் பெயர்கின்றது. காதலர் தப்பாது வருவர். ஆதலால் வருந்தாதேகொள் என்று வற்புறுத்திய தோழிக்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவினாலன்று, அவரன்பின்மை பற்றியே யென்று எதிரழிந்து கூறியவாறு. 'அளியின்மை' பிரிதலும் பிரிந்துவரவு நீடலும் தூதுவிடாமையுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(என்றாலும் அவரைப் பிரிந்திருப்பதைச் சகிக்க முடிய வில்லையே!) என்னுடன் இருக்கும்போது, 'உன்னுயிரும் என்னுயிரும் வேறன்று' என்று சொல்லும் என் காதலர், என்னருகில் இல்லாதிருப்பதை நினைத்து நினைத்து என் சீவன் குறைகின்றது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'நாம் இருவரும் வேறல்ல' என்று சொன்ன காதலருடைய அன்பில்லாத தன்மையினை நினைத்து எனது இனிய உயிர் கழிந்து சென்று கொண்டிருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நாம் இருவரும் வேறல்லர் என்று கூறி எம் காதலர் பிரிந்து சென்றார். அவர் தம் அருளற்ற செயலை எண்ணிப் பார்த்தால் என் உயிரே அழியத் தொடங்குகிறது.
|
|
Translation
|
|
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.
|
|
Explanation
|
|
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
|
|
Transliteration
|
|
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|