|
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இப்பிரிவுத் துன்பமறிந்து வந்து காதலர் உனக்குச் சிறந்த இன்பஞ் செய்வர் என்ற தோழிக்குச் சொல்லியது.) (இ-ரை.) எனைத்து நினைப்பினும் காயார் - யான் தம்மை எவ்வளவு நினைத்தாலும் அது பற்றிச் சினங்கொள்ளார்; அனைத்து அன்றோ காதலர் செய்யும் சிறப்பு - அவ்வளவு பெரிதன்றோ காதலர் எனக்குச் செய்யுஞ் சிறந்த இன்பம்! தனக்கு அற்றை நிலையில் அந்நினைப்பினும் சிறந்த இன்பமின்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள், காயாமை அந்நினைவிற் குடம்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தோழி கூற்றைக் குறிப்பாற் பழித்துப் பகடிசெய்தவாறு. 'காதலர் நம் மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் ஓதும் பாடவேறுபாடுகள் சிறந்தன வல்ல.
|
|
கலைஞர் உரை:
|
|
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அவர் என்னைப் பிரிந்திருப்பதைப்பற்றி நான் எப்படியெல்லாம் அவரை நொந்து கொண்டு நினைத்தாலும் என் மனத்திலுள்ள அவர் கோபிப்பதே யில்லை. அதுவல்லவா என் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தலைவரை யான் எத்துணை அதிகமாக நினைத்தாலும் அதற்க்கு அவர் கோபிக்கமாட்டார். அதனால் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பான இன்பம் அத்தகையதல்லவா?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எம் காதலரை யாம், எப்படி, எப்பொழுது நினைத்தாலும் அவர் என்மேல் கோபம் கொள்ளுவதில்லை. இதுவே அவர் எனக்கு செய்யும் சிறப்பு
|
|
Translation
|
|
My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.
|
|
Explanation
|
|
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ? .
|
|
Transliteration
|
|
Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|