|
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(நீயிங்ஙனம் பசத்தல் கூடாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால்- இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல்- இவளை அவர் கைவிட்டுப் போய்விட்டாரென்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்துஒருவருமில்லை. தன்னையே கடிதல் பற்றிப் புலக்கின்றாளாதலின்,'என்பார்' என அயன்மைபடுத்திக் கூறினாள்.
|
|
கலைஞர் உரை:
|
|
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இவள் என்ன இப்படிப் பசந்துவிட்டாளே, என்று எல்லாரும் ஏளனம் செய்கிறார்களே அல்லாமல் 'அவர் இவளை இப்படிப் பசக்கவிட்டுப் பிரிந்திருக்கிறாரே' என்று பச்சாத்தாபப் படுகிறவர்கள் யாருமில்லையே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இவள் பொறுத்திருக்க முடியாமல் பசப்பு நிறம் அடைந்துவிட்டார் என்று என்னைப் பழிகூறுவதல்லாமல், இந்த நாயகியை அவர்விட்டுப்போய் விட்டார் என்று அவரைக் குறைகூறுவார் ஒருவரும் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இவள் பசலைநோய் உற்றாள் என்று என்னைப் பழிக்கின்ற உலகம், அவர் ஏன் இவளை விட்டுச் சென்றார் என்று எதுவும் பேசுவதில்லை.
|
|
Translation
|
|
On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'.
|
|
Explanation
|
|
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".
|
|
Transliteration
|
|
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|