|
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- ஏதேனுமொரு துன்பம்நேர்ந்தவிடத்து அதைச் சாக்கிட்டுத் தம்மை விரைந்து பிறருக்கு விற்றற்கே யுரியர். 'ஒன்று' என்றது, பணத்தேவையான ஏதேனு மோர் அமையம் அல்லது பதவியைக் காத்துக்கொள்ளப் பிறர்க்கு அடிமைப்படும் நிலைமை கொள்பவர் தம் கயமை யறிந்து வேண்டாமென்னுமுன் தம்மை விற்று விடுதலும்,தன்மானமும் உரிமையுணர்ச்சியும் ஒரு சிறிதும் இல்லாதவர் என்பதும் தோன்ற, 'விரைந்து' என்றார். கீழ்மக்கள் ஒன்றிற்கும் உதவார் என்பது கருத்து. இக்குறளால் அவரின் அடிமை மனப்பான்மை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கயவர்கள் எந்த நல்ல காரியத்துக்கும் உதவமாட்டார்கள். பின்) கயவர்கள் எதற்காவார்கள்? சமயம் நேர்ந்தால் தீய காரியங்களைச் செய்யக் கூலிக்காரர்களாகத் தம்மை உடனே விலைக்கு விற்றுவிடத்தான் உதவுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருள் போகும் இடமெல்லாம் தாங்கிக் கொண்டுபோய் மற்றவர் களுக்குச் சொல்லுதலால், அக்கயவர் அடிக்கப்படுகின்ற பறையினை ஒப்பவராவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இந்த கயவர்களை எந்த வகையில் சேர்ப்பது ? தனக்கென்றோர் இடர்வரின் தன்னை விற்றற்குக் கூட விரைந்து முன் நிற்கின்றார்களே
|
|
Translation
|
|
For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!.
|
|
Explanation
|
|
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.
|
|
Transliteration
|
|
Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|