|
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு - தம் அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையா ரல்லாதார்க்கு; கயவர் ஈர்ங்கை விதிரார் - கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார். கயவர் வலியார்க்கன்றி மெலியார்க்கு இம்மியுங் கொடார் என்பது, இக்குறளால் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கயவர்கள் தம்முடைய) தாடையில் அடித்துப் பல்லை உடைக்கக்கூடிய கைவலிமை உடையவர்களுக்கன்றி மற்ற யாருக்கும் உணவுண்ட ஈரக் கையைக்கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முறுக்கிய கையினால் தமது கன்னத்தினை நெறிப்பவர்க்கு அல்லாமல் கீழ்மக்கள்தாம் உணவு உண்டு பூசிய ஈரக்கையினையும் யாசிப்பவர்களுக்குத் தெறிக்கமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கன்னத்தைப் பதம்பார்க்கும் கைகளையுடைய வன்கண்ணார் அல்லாதவர்க்கு சுயவர்கள் தன் ஈரக்கையைக் கூட உதற மாட்டார்கள்.
|
|
Translation
|
|
From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.
|
|
Explanation
|
|
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
|
|
Transliteration
|
|
Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|