|
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க-மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.
மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை
நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உதவி செய்தாலும் செய்யாவிடினும்) குற்றமற்ற நல்லவர் களுடைய நட்பை ஒருபோதும் மறக்கக்கூடாது; ஆனால் துன்பக் காலத்தில் உதவி செய்தவர்கள் குற்றமுள்ளவர்களானாலும் அவர் களுடைய நட்பைத் தள்ளிவிடக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை விடாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மறவாதிருத்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குற்றமற்றவர்கள் நட்பை என்றும் மறந்து விடலாகாது, அதுபோல் துயருற்ற காலத்தில் துணையாக இருந்தவர் நட்பையும் எந்த சூழலிலும் விட்டு விடலாகாது.
|
|
Translation
|
|
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
|
|
Explanation
|
|
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
|
|
Transliteration
|
|
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|