|
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்', 'சான்று' என்பன திரிந்து நின்றன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தொடிப்புழுதி கஃசா உணக்கின்- ஒரு நிலத்தை யுழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அந்நிலத்திற் செய்த பயிர் கைப்பிடியெருவுந் தேவையின்றிச் செழித்து வளரும். பிடித்து ஒருபிடிக்குள் அடங்கியது. உம்மை இழிவு சிறப்பு. 'புழுதி' என்றமையால் உழுதபின் கட்டியடித்தலும் பரம்படித்தலும் பெறப்படும்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உழுத நிலத்திலுள்ள உடைப்பட்ட மண் ஒரு பங்கு காற்பங்காகச் சுண்டும்படி ஆறவிட்டு விதைத்தால் கைப்பிடி எருக்கூடப் போடாவிட்டாலும் மிகுந்த விளைச்சலுண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உழுபவன் நிலத்தின் ஒரு பலப்புழுதி காற்பலம் ஆகுமாறு அதனை உழுது காய விடுவானாகில் அந்நிலத்தில் விளையும் பயிர் ஒரு பிடி எருவும் இடவேண் உாமல் தழைத்து விளையும்
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உழவுத் தொழிலில், ஒரு பங்கு புழுதியைக் காற்பங்கு ஆகுமாறு உழுது உலர விட்டால் உரம் போடாமலே கூட பயிர்கள் நன்றாகச் செழித்து வளரும்.
|
|
Translation
|
|
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.
|
|
Explanation
|
|
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
|
|
Transliteration
|
|
Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum
Ventaadhu Saalap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|