|
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க் கெல்லாம் பொதுவாக வுரியனவாம்; நாண் உடைமை மாந்தர் சிறப்பு- ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக வுரியதாம். ஊணுடையொழிந்தன அணி மனை பேச்சு கல்வி முதலியன.'அச்சம் ' என்னும் பாடம் சரியானதன்று.
|
|
கலைஞர் உரை:
|
|
உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மனிதருக்குச் சிறப்புத் தருவது அந்த நாணுடைமைதான்.) எல்லா மனிதர்களுக்கும் உணவு, உடை முதலிய மற்றவைகள் ஒரே மாதிரிதான்.ஆனால் மனிதர்களைச் சிறப்புக்களில் வேறுபடுத்துவது நாணுடைமை என்னும் பழிக்கஞ்சும் குணந்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உணவும் உடையும் மற்றவைகளும் எல்லா உயிர்களுக்கும் பொதுவேயாகும். நன்மக்களுக்குச் சிறப்பானது நாணமுடைமையேயாகும்; மற்றவையல்ல என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உண், உடை, எச்சம் இவைஎல்லாம் உலகில் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஆனால் பழிகளுக்கு அஞ்சும் பண்பே மாந்தர் என்னும் சிறப்பைத் தருவது.
|
|
Translation
|
|
Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known.
|
|
Explanation
|
|
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
|
|
Transliteration
|
|
Oonutai Echcham Uyirkkellaam Veralla
Naanutaimai Maandhar Sirappu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|