Thirukural

75. அரண்

741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்.

742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.

743

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்.

744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்.

745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண்.

746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.

747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண்.

748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண்.

749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.

750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.