|
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை-செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு-அது பேதையரிடத்திலேயே உள்ளது.
செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்
எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(விருந்தோம்பப் பணக்காரராக இருக்க வேண்டுமென்ப தில்லை. ஆனால் பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காரராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள் தாம்; அவர்களுக்கு முட்டாள் தனந்தான் மிச்சம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்ல விருந்தினரைப் பேணி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள், பொருளைக் காப்பாற்றி இழந்து இதுபோது பற்றுக்கோடு இல்லையானோம், என்று இரக்கப்பட்டு வருந்துவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இருந்தும் இல்லாமை எனப்படுவது விருந்தோம்பல் என்னும் பண்பின் தலைப்படாத் தன்மையே. இந்நிலைமை அறிவில்லாதவர்களிடமே உண்டு.
|
|
Translation
|
|
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.
|
|
Explanation
|
|
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
|
|
Transliteration
|
|
Utaimaiyul Inmai Virundhompal Ompaa
Matamai Matavaarkan Untu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|