|
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்மையுள் இன்மை அறிவு இன்மை--ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; பிறிது இன்மை உலகு இன்மையா வையாது--மற்றச் செல்வமின்மையை உயர்ந்தோர் வறுமையாகக் கருதார். அறிவு என்னும் பொதுப்பெயர் இங்கு வழக்குப்பற்றி நல்லறிவைக் குறித்த்து. அறிவில்லார் செல்வம் பெற்றவிடத்தும் அதனாற் பெறக்கூடிய இம்மை மறுமைப் பேறுகளைப் பெறாமையின், அதை'இன்மையு ளின்மை' என்றும், அறிவாளர் வறியவராயிருந்த விடத்தும் இருமைப் பேறுகளையும் பெறுதலால் அதை 'இன்மையாவையாது' என்றும், கூறினார். 'இன்மைச் சொல் பின்னும் வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி' 'ஆக' என்னும் வினையெச்சவீறு கடைக்குறைந்து, நின்றது. 'உலகு' ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தரித்திரத்தில் தரித்திரம் அறிவில்லாத தரித்திரமே. மற்ற எது இல்லாத தரித்திரத்தையும் உலகம் குற்றமாக இகழ்வதில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமை அறிவில்லாமையேயாகும். மற்றைப் பொருளில் லாமையோ என்றால் அதனை இல்லாமையாக உலகத்தார் கொள்ள மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிவில்லாமையே வறுமையுள் வறுமையாகும் பிற செல்வமின்மையை உலகம் வறுமையாகக் கருதாது.
|
|
Translation
|
|
Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.
|
|
Explanation
|
|
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
|
|
Transliteration
|
|
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|