|
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது.'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்'என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெரும்பொருளால் பெள்தக்கது ஆகி - பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதாய்; அருங்கேட்டால் - கேடில்லாமையோடுகூடி; ஆற்ற விளைவது நாடு - நானிலச்செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது. பெருமை பொருளின் அளவையும் வகைகளையும் தழுவிநின்றது. கேடாவன மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசுண்மை என ஆறென்றும்; வெட்டில், கிளி, யானை, காட்டுப்பன்றி, தொட்டியர். கள்வர், பெரும்புயல் என ஏழென்றும்; விட்டில், கிளி, யானை, தன்னரசு (Autocracy), வேற்றரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று என எட்டென்றும்; மூவகையிற் சொல்லப்படும். "மிக்கபெய லோடுபெய லின்மையெலி விட்டில்கிளி யக்கணர சண்மையோ டாறு" வெட்டில் கிளியே நாவா யேனம் தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புயல் நட்டம் நாட்டேழ் குற்ற மாகும்." (பிங்.3:7) "விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு நட்டம் கடும்புனல்கா லெட்டு" கேடருமை யென்பது ' அருங்கேடு' எனச் செய்யுளில் முறைமாறி நின்றது. கேடுகளுள் இயற்கையாய் வருவன செங்கோலாலும் இறைவழிபாட்டாலும், யானையால் வருவது வேட்டையாலும், அரசரால் வருவது குடிகளின் எதிர்ப்பாலும் போராலும், நீக்கப்படும். நானிலச் செல்வமான, நாடுபடு செல்வமும் காடுபடு செல்வமும் மலைபடு செல்வமும் அலை (கடல்) படுசெல்வமுமாம்.
|
|
கலைஞர் உரை:

சாலமன் பாப்பையா உரை:
|
|
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பல பொருள்களும் கிடைக்கக் கூடிய இயற்கை வளமுள்ள இடம் என்று யாரும் விரும்பி நாடி வரக்கூடியதாகவும் குறைந்த உழைப் பினால் மிகுந்த விளைச்சல் தரக்கூடியதாகவும் உள்ளதே நல்ல நாடு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அளவற்ற பொருளுடைமையால் பிற தேசத் தாரும் விரும்பத்தக்க தாகி கேடில்லாமையோடு கூடி மிக்க விளைச்சலினை யுடையதே நாடாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருள் வளத்தால் யாவரும் விரும்பத்தக்கதாகி, கேடுகள் இல்லாததாய், விளைச்சலையும் குன்றாது தருவது நாட்டின் சிறப்பு.
|
|
Translation
|
|
That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.
|
|
Explanation
|
|
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
|
|
Transliteration
|
|
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|