|
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கற்ற களன் அஞ்சிக் செலச்சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் -உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர். களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால் "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டியதில்லை. இவ்வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது. உறுப்பியலின் முதற்பகுதியான அமைச்சியல்( அதி. 64-73) முற்றும்.
|
|
கலைஞர் உரை:
|
|
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) சபைக்கு அஞ்சித் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குப் பயனுண்டாகும்படி சொல்ல முடியாதவர்கள் இருந்தும் இல்லாததற்குச் சமானம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அவை (சபை)க் களத்திற்குப் பயந்து தாம் கற்றவ ற்றை ஏற்கும்படியாகச் சொல்ல மாட்டாதார், உயிர் வாழ்கின்றார் என்றாலும் இறந்தவரொடு ஓட்பாவார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவை அச்சத்தால் தான் கற்றவற்றைச் சிறப்பாக எடுத்துரைக்க இயலாதார், அறிவுடையார் எனினும் இல்லாதவராகவே கருதப்படுவார்.
|
|
Translation
|
|
Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.
|
|
Explanation
|
|
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
|
|
Transliteration
|
|
Ulareninum Illaarotu Oppar Kalananjik
Katra Selachchollaa Thaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|