|
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முடிவும்-வினை முடிதற்கு வேண்டிய முயற்சியும்; இடையூறும்-அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும்; முற்றிய ஆங்கு எய்தும் படுபயனும்-தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும்; பார்த்துச் செயல்-ஆராய்ந்து பார்த்து வினைசெய்க. பெரும்பயன் எனவே சிறுபயன்வினை விலக்கப் பட்டதாம். 'படு' என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப்பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'முடிவு' ஆகுபெயர். முற்றியாங்கு (முற்றிய ஆங்கு) - முற்றியபோது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tam
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த ஐந்தும் பொருந்திய பிறகும்) காரியம் முடிவுறுமா அல்லது அதற்கு இடையூறுகள் வந்து கெட்டுப்போகுமா, கெடாமல் முடிந்தாலும் உடனே கிடைக்கக்கூடிய பலன்கள் அதற்காகப் பட்ட துன்பங்களுக்குத் தகுந்தனவாக இருக்குமா என்பனவற்றையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழில் செய்யும்போது அது முடிவதற்குண்டான முயற்சியும், அதற்கு உண்டாகும் இடையூறும், அது நீங்கி முடிந்தால் தான் அடையும் பெரிய பயனும் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு செயலைத் தொடங்கும் போது அதனை முடிக்கும் வகை, ஏற்படும் இடையூறுகள் விளையும் பயன்கள் ஆகியவற்றை எண்ணித் தேர்ந்து கொள்ளவேண்டும்.
|
|
Translation
|
|
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.
|
|
Explanation
|
|
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
|
|
Transliteration
|
|
Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum
Patupayanum Paarththuch Cheyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|