|
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மடிமை குடிமைக்கண் தங்கின் -சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் -அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும்.
மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக் கேட்டை. குடிமை குடிசெய்யுந்தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை , ' தன்னொன்னார்க்கு ' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச் செல்வம் ,இன்பம் , அறிவு , ஒழுக்கம் , ஆட்சி ,வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச்செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி
விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பொதுக் காரியங்களைச் செய்யச் சோம்பினால் ஊரார் அவமதிப்போடு முடியும். ஆனால் குடும்ப காரியங்களில் சோம்பினால்) ஒருவன் தன் குடும்பக் காரியங்களில் சோம்ப லுள்ளவனாக இருப்பானாகில் அக் குற்றம் அவனுடைய பகைவர் களுக்கும் ஏவல் செய்து பிழைக்க வேண்டிய அடிமையாக்கிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மடியானது நற்குடியில் பிறந்தவனிடத்தில் இருந்துவிடுமானால், அது அவனைத் தன்னுடைய பகைவர்களுக்கு அடிமையாகும் தன்மையினை உண்டாக்கிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்குடிப் பிறந்தவனாய் இருப்பினும் சோம்பலுக் காட்படுவானாயின் அம்முயற்சி இலாப் பண்பு அவளை பகைவர்க்கு அடிமை ஆக்கி விடும்.
|
|
Translation
|
|
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
|
|
Explanation
|
|
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
|
|
Transliteration
|
|
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|