|
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை. (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை.
இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன் ; கொற்றம் கொளக்கிடந்தது இல் - வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை.
நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன் ,திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில் ' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியின்றிக் கொள்ளக்கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினுமமையும்.
|
|
கலைஞர் உரை:
|
|
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்
விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே
இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி அறிந்து கொள்ளத்தான் ஒற்றர்கள். ஆகையால் ஒற்றர்கள் மூலமாக அறியவேண்டிய சேதிகளை அவ்வப்போது இரகசியமாக அறிந்துகொள்ளாத அரசன் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒற்றராலே எல்லாரிடத்திலும் நிகழ்ந்த வற்றை அறிந்து வருமாறு செய்து அதனால் அடையும் பயனை ஆராயாத மன்னவன், வெற்றியடைவதற்குரிய வழி இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒற்றர்களைக் கொண்டு உளவறிந்து, அறிந்தவற்றை ஆய்ந்து தெளிந்து அதற்கேற்ப செயல்புரியாத மன்னனுக்கு வெற்றி பெற வேறு வழி இல்லை.
|
|
Translation
|
|
By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to that unwary king.
|
|
Explanation
|
|
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
|
|
Transliteration
|
|
Otrinaan Otrip Poruldheriyaa Mannavan
Kotrang Kolakkitandhadhu Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|