|
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வெருவந்த செய்து ஒழுகும் வெம்கோலன் ஆயின் -அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் -உறுதியாக விரைந்து கெடுவான்.ஒரு வந்தம்-ஒரு தலை.
|
|
கலைஞர் உரை:
|
|
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக
விரைவில் அழியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படியின்றிக்) குடிகள் நடுங்கும்படியாகத் தண்டித்து ஆட்சிபுரியும் கொடுங்கோல் மன்னவன், நிச்சயமாக வெகு விரைவில் கெட்டுப்போவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குடிகள் மிகவும் அஞ்சுகின்ற செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாகிவிடில், அவ்வரசன் உறுதியாகக் கடிதல் கெடுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குடிமக்கள் அஞ்சத் தக்க வகையில் கடுமையாக நடந்து கொள்ளும் கருணையற்ற மன்னவரின் ஆட்சி விரைவில் கெட்டொழியும்.
|
|
Translation
|
|
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.
|
|
Explanation
|
|
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
|
|
Transliteration
|
|
Veruvandha Seydhozhukum Vengola Naayin
Oruvandham Ollaik Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|