|
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.
இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாயிருப்பின் ; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ்வுலகத்தில் இல்லை.
பெருங்கொடை வறுமை நீங்குமளவு கொடுப்பது . சினத்தொடு கொடுப்பின் கொடைத்தன்மை கெடுமாதலின், 'வெகுளிபேணான் 'என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை
விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ
இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்தக் குணங்கள் மிகுந்தவனாய்ப்) பெரிய கொடையாளி யாகவும் கோபம் இல்லாமல் கொடுப்பவனாகவும் உள்ள வனைவிடப் பக்க பலம் உள்ளவர்கள் இந்தப் பெரிய உலகத்தில் யாரும் இல்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் சிறந்த கொடையாளியாகவும், கோபத்தினை விரும்பாதவனாகவும் இருப்பானானால், அவனைப் போல கிளை உடையார் இவ்வுலகில் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெரிய கொடையாளியாகவும் எதற்கும் கோபம் படாதவனாகவும் ஒருவன் இருப்பின் அவனைப் போல் சிறந்த உறவினரை உடையவர் உலகில் யாரும் இல்லை.
|
|
Translation
|
|
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.
|
|
Explanation
|
|
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
|
|
Transliteration
|
|
Perungotaiyaan Penaan Vekuli Avanin
Marungutaiyaar Maanilaththu Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|