|
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,
குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக்
கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - உறவினத் தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வவாழ்க்கை ; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்த அற்று - குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும்.
கரையில்லாத குளத்துநீர் காப்பின்றி வெளிச்சென்று விடுவது போல , உறவின மில்லாதவன் செல்வழுங் காப்பாரின்றிப் பிறர் கைப்பட்டு விடும் என்பதாம் . உறவினத்தொடு என்பது அதிகாரத்தால் வந்தது . அளவுதல் - கலத்தல் அல்லது கலந்துபேசுதல் . 'அளாவு' அளவு என்பதன் நீட்டம் . அளவளாவு(தல்) என்பது அளப்பள(த்தல்) என்பது போல் பெயரும் வினையுஞ் சேர்ந்த கூட்டுச்சொல் .அது இங்கு முதனிலைத் தொழிற்பெயராக நின்றது . வாழ்க்கை யென்றது செல்வத்தோடு கூடிய நல்வாழ்க்கை , நிறைதல் என்பது குளத்திற்கும் நீர்க்கும் பொதுவினையாதலின் , 'நீர் நிறைந்தற்று' , என்பது நீரால் நிறைந்தற்று என்னும் பொருள் படநின்றது . 'ஆன்றோர் அறிவுநிறைந்தோர்' என்னுந்தொடரமை தியை இதனொடு ஒப்புநோக்குக.
|
|
கலைஞர் உரை:
|
|
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து
பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர்
நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சுற்றத்தார் இருப்பதுதான் ஒருவனுடைய வாழ்க்கையின் இன்பமும் பயனும்) குலவி மகிழ உற்றார் உறவினர்கள் ல்லாதவனுடைய வாழ்க்கை செல்வம் நிறைந்திருந்தாலும் கரையில்லாத ஏரியில் நீர் நிறைவதுபோலப் பயனற்றதும் பாதுகாப்பாற்றதுமாக வீணாகிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சுற்றத்தாருடன் நெஞ்சு கலந்து பழகுதல் இல்லாதவனுடைய வாழ்க்கையானது குளத்தின் பரப்பானது இருக்க வேண்டிய கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கரையில்லாத குளத்தில் நீர் நிரம்பியிருப்பினும் அது பயனற்று வீணாதல் போல, உறவினர்களோடு கலந்து மகிழ்ந்து வாழாதான் வாழ்க்கையும் பயனற்றதே.
|
|
Translation
|
|
His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.
|
|
Explanation
|
|
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
|
|
Transliteration
|
|
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak
Kotindri Neernirain Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|