|
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
50
வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப
|
|
மணக்குடவர் உரை:
|
|
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.
இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், 'வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை.
|
|
கலைஞர் உரை:
|
|
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கடவுளை அடையவேண்டு மென்று தானே துறவறத் துக்குப் போகிறார்கள்? துறவறத்துக்குப் போகாமலேயே) உலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் வேறு முயற்சியில்லாமலும் வானத்தில் இருக்கிற தெய்வத்தோடு சேர்க்கப்படுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இவ்வுலகில் இல்லறத்தினை நடத்தி வாழவேண்டிய முறையில் வாழ்பவன் வானத்தில் வாழ்கின்ற தெய்வங்களுள் ஒன்றாக வைத்து மதிக்கப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அன்பும் அறனும் பொருந்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்தோரே, வானுலகத்து தெய்வத்திற்கு ஒப்பாக வைத்துப் போற்றப்படுகிறார்
|
|
Translation
|
|
Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
|
|
Explanation
|
|
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.
|
|
Transliteration
|
|
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu�ryum
Theyvaththul Vaikkap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|