|
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை அறத்தின் இயல்பையறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை; திறன் அறிந்து தேர்ந்து கொளல் - தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க.
அறத்தின் தன்மையை நூலாலன்றி உத்தியாலும் பட்டறிவாலும் அறியவேண்டுதலின், 'அறனறிந்து' என்றார். மூத்தல் ஆண்டாலும் அறிவாலும் முதிர்தல். அறிவுடையார் அரசு நயன்மையையும் (நீதியையும்) உலகியலையும் ஒருங்கே அறிந்தவர். திறனறிதல் தலையிடை கடை யென்னுந் தரமறிதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து,
அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒவ்வொருவரும்) தம்மினும் தர்மங்களை அறிந்தவர் களாகவும் அனுபவம் முதிர்ந்தவர்களாகவும் திறமை உள்ளவர் களாகவும் இருக்கிற பெரியவர்களுடைய ஆதரவைத் தேவைக்குத் தகுந்தபடி ஆராய்ந்தறிந்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் அருமையினையறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறத்தின் நிலைப்பாடுகள் அறிந்த வயதில் முதுமை சான்ற அறிஞர் பெருமக்களின் நட்பை அவர்தம் திறமையை உணர்ந்து தேர்ந்து துணையாய்க் கொள்ளுதல் வேண்டும்.
|
|
Translation
|
|
As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.
|
|
Explanation
|
|
Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledg
|
|
Transliteration
|
|
Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai
Thiranarindhu Therndhu Kolal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|