|
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே-செய்யாது விடத்தக்கது தீவினையே.
'ஓரும்' ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் 'ஆராய்ந்தறியும்' என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டுமென்பது அறச் செயல் தான். செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பது பழி, பாவச் செயல்களேயாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும், நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் தன்வாழ்நாளில் ஓர்ந்து செய்யத்தக்கது அறன். தவிர்க்க வேண்டியவை பழியை நல்கும் தீய செயல்கள்.
|
|
Translation
|
|
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
|
|
Explanation
|
|
That is virtue which each ought to do, and that is vice which each should shun.
|
|
Transliteration
|
|
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|