|
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
இது வீடு தருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும். 'படாஅமை' இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத் தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல்.
|
|
கலைஞர் உரை:
|
|
பயனற்றதாக
ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு
வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே
விளங்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறத்தை
செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால்,
அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பல்லக்கில் சவாரி செய்கின்ற சுகம் சொற்ப அறம் செய்ததால் வந்தது; மிகுந்த அறம் செய்கிறவர்கள் அதைவிட மேலான இன்பங்களை அடையலாம்) சாகிற வரையிலும் தர்மங்களையே செய்கிறவர்கள் பிறவாதிருக்கிற பேரின்பத்தையும் பெறலாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறம் செய்யாத நாளே இல்லாமல் ஒருவன் நடந்துகொள்ளுவானானால், அது அவன் மீண்டும் உடம்போடு பிறத்தில் என்னும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வில் ஒருநாள் கூட வீணாகாமல், நற்பணிகள் ஆற்றிக் கொண்டேயிருத்தல் நன்று, அஃதவன் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கேதுவான கல் ஆகும்.
|
|
Translation
|
|
If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil
|
|
Explanation
|
|
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births
|
|
Transliteration
|
|
Veezhnhaal pataaamai nandraatrin aqdhoruvan
Vaazhnhaal vazhiyataikkum kal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|