|
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும்.
இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பற்றினைப் பற்றி விடாதவர்க்கு -இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; இடும்பைகள் பற்றி விடா - பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை.
'விடாஅ' ஈரிடத்தும் இசைநிறையளபெடை. 'விடாஅ தவர்க்கு வேற்றுமை மயக்கம். பற்று விடாதார்க்கு வீடில்லை யென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல்
பற்றிக் கொள்கின்றன.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில் 'யான்' 'எனது' என்ற) பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித் துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பற்றுகளை இறுகப் பிடித்துக் கொண்டு விடாதவர்களைப் பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
யான், எனது என்னும் பற்றுகளிலிருந்து விடுபடாதவர்களை உலகத்துயர்களும், பிறவித்துன்பமும் பற்றியே நிற்கும்.
|
|
Translation
|
|
Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.
|
|
Explanation
|
|
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
|
|
Transliteration
|
|
Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|