|
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.
இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் - தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.
'ஈண்டு முயலப்படும் ' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. 'வேண்டிய' என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமு மாகிய மூவகை யின்பங்கள்.
இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ்விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை , விருந்தோம்பல் , நடுநிலைமை, ஒப்புரவறிதல் , ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, "மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா" என்றார் பரிமேலழகர் . கூடா வொழுக்கமும் போலித் துறவும் பூண்டு கொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந்நடிப்பு இல்லறத்தில் இயலாது.
|
|
கலைஞர் உரை:
|
|
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய
முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆனால் வீடு பெறக் கருதிய தவசி தன் வலிமையை வீணில் செலவழிக்கலாகாது. ஏன்எனில்) வெறுப்பு விருப்புக் களினால் (சாபமோ வரமோ) விரும்பியதை விரும்பியபடி செய்துவிட்டால் தவ வலிமை செலவாகிப்போகும். வீடு பெறக் கருதிய தவத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப்பிறப்பில் முயன்று செய்யப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
விரும்பிய வற்றை விரும்பிய வாறே எய்துதற்கு இயலும் என்பதால் தான் தவ ஒழுக்கம் ஈண்டு முயன்று பெறப்படுகிறது.
|
|
Translation
|
|
That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.
|
|
Explanation
|
|
Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
|
|
Transliteration
|
|
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|