|
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.
இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?
அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்
பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும்
நிம்மதியாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கோள் சொல்லுகிறவனானாலும் அதற்குக் காது கொடுக் கிறவனானாலும்) பிறரிடம் குற்றம் காண்பதைப் போல் தன் குற்றத்தையும் காண்பானாகில் மனிதருக்குக் கோள் சொல்லுவதனால் உண்டாகிற தீமைகள் இருக்குமா? இருக்க மாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மற்றவர்களுடைய குற்றத்தினைக் கண்டு பேசுவது போலத் தன்னுடைய குற்றத்தினையும் காணும் தன்மை உடையவனானால், அவனுடைய நிலைபேறுடைய உயிர்க்கு உண்டாவதொரு தீமை உண்டோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர் குற்றங்களை உற்று நோக்குவதுபோலவே, தன்குற்றத்தையும் ஒருவன் கருதுவானாயின் இவ்வுலக மாந்தர்களுக்கு யாது துன்பம்?
|
|
Translation
|
|
If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?.
|
|
Explanation
|
|
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.
|
|
Transliteration
|
|
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|