|
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு,
இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் -பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை.
உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு
பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வேறு ஒரு குற்றம் செய்யாவிட்டாலும் பொறாமைக் குணமே ஒருவனைக் கெடுத்துவிடும்.) பொறாமைக் குணம் உள்ளவர்களுக்குக் கேடுண்டாக்க அதுவே போதும். பகைவர்களால் கெடுக்க முடியாத வனையும் அது கெடுத்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டுவதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்குப் போதுமானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொறாமை குணம் கொண்டவர்களுக்கு துன்பம், அவர் செயல்களாலேயே நிகழ்ந்துவிடும். பகைவர்கள் வந்து தான் கேடு விளைவிக்க வேண்டுமென்பதில்லை.
|
|
Translation
|
|
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate..
|
|
Explanation
|
|
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
|
|
Transliteration
|
|
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukkayum Keteen Padhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|