|
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் .
மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.
தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒழுக்கத்தால் மேன்மை அடைவது மட்டுமன்றிப் பின்னால் பல நன்மைகளும் உண்டாகும்.) நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னால் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை தெளிப்பதாகும். ஆனால் தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பமுண்டாகும்; பின்னாலும் துன்பம் வரும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்லாருக்கும் என்பது நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்கமானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்லொழுக்கம் என்பது வாழ்வின் நன்மைகளுக் கெல்லாம் விதையைப் போன்றது. தீயொழுக்கமோ, எப்போதும் துன்பத்தையே தரும்.
|
|
Translation
|
|
'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.
|
|
Explanation
|
|
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
|
|
Transliteration
|
|
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam
Endrum Itumpai Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|