|
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய்.
இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
என் நெஞ்சு-என் உள்ளமே!; உறாதவர்க் கண்ட கண்ணும்-கணவர் இன்று நம்மாட்டு அன்பில்லாதவர் என்று அறிந்த பின்பும் ; செறார் என அவரைச் சேறி-நாம் அவரிடஞ் சென்றால் சினவாமற் சேர்த்துக்கொள்வாரென்று கருதி அவர்பாற் செல்லுகின்றாய் ; இதுபோலும் மடமை வேறுண்டோ!
பழங்காதல் நோக்கிச் செல்கின்றாய் . நீகருதியது நிறை வேறுமோ வென்பதாம் . ' அவரை' வேற்றுமை மயக்கம் ; இரண்டாவது ஏழாவதில் மயங்கிற்று.'உறாஅ' இசைநிறை யளபெடை. செறாஅர்' எதுகை பற்றி வந்த இன்னிசை யளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும்,
நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என்னுடைய மனமே! அவருக்கு நம்மிடத்தில் ஆசை யில்லை யென்பதைக் கண்டுவிட்ட பின்னும் அவர் நம்மை வெறுக்கமாட்டா ரென்று அவரிடமே போகின்றாயே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
என் நெஞ்சே! நம்மிடம் அன்புடையவர் ஆகாதவரை உள்ளவாறு அறிந்திருந்தும் நாம் சென்றால் அவர் கோபிக்கமாட்டார் என்று கருதி அவரிடம் சொல்லுகின்றாய்! என்னே அறியாமை?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என் நெஞ்சே, என்பால் அன்பு காட்டாதவர் எனத் தெரிந்தும் நம்மை வெறுக்கமாட்டார் என்றெண்ணி அவர் பின்னாலேயே செல்கிறாயோ?
|
|
Translation
|
|
'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?.
|
|
Explanation
|
|
my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased.".
|
|
Transliteration
|
|
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|