|
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காணுங்கால் தவறாய காணேன்-கணவரை யான் காணும்பொழுது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன்-அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளையல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமையாற் புலந்திலேன் என்பதாம் . கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை;
அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும்
நான் காண்பதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதுமட்டுமல்ல) காதலர் நான் காண என் அருகிலேயே இருக்கும்பொழுது அவரிடம் ஒரு குற்றமும் காண முடியவில்லை. ஆனால் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டபோது அவர் செய்வதெல்லாம் குற்றமாகவே தோன்றுகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலரைக் காணுகின்றபோது அவரது தவறுகளைக் காண முடியாதவளாகின்றேன். அவரைக் காணாத போது தவறுகள் அல்லாமல் பிறவற்றைக் காண்கின்றிலேன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலரை நேரிற்காணுங்கால் அவருடைய தவறுகள் தெரிவதில்லை; காணாத போது, அவருடைய தவறன்றி வேறெதுவும் தெரிவதில்லை.
|
|
Translation
|
|
When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.
|
|
Explanation
|
|
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
|
|
Transliteration
|
|
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|