|
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவேன் என்பது படச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து கூடி யின்பந்தராதவரை கனவினாற்காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கட் கண்ட காட்சியால் என் உயிர் தழைக்கின்றது . அக்காட்சியால் யான் ஆற்றியுள்ளேன். நீகவல வேண்டிய தில்லை என்பதாம். மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்து மயங்கின.
|
|
கலைஞர் உரை:
|
|
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
விழிப்பில் வந்து இன்பம் கொடுக்காத காதலரை நான் தூக்கத்திலாவது கனவில் கண்டு இன்பமடைந்து விட்டதனால் என் உயிருக்கு இனிப் பயமில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நனவில் வந்து அன்பு செய்யாதிருக்கும் கணவரை யான் கனவில் கண்ட காட்சியாலே என்னுடைய உயிர் இருந்து வருகின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நேரில் உடன் இருந்து அன்பு செய்யாது விலகிச் சென்று விட்ட காதலரைக் கனவினால் கண்டு மகிழ்வதாலேயே என் உயிர் நிலைத்து இன்னும் இருக்கிறது.
|
|
Translation
|
|
Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!.
|
|
Explanation
|
|
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
|
|
Transliteration
|
|
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|