Thirukural

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு)
மணக்குடவர் உரை:
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) (இ-ரை.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்-முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும் அன்றே பெற்றாற்போல நீங்காத பெருமகிழ்ச்சியைத்தருதலால்; கள்ளினும் காமம் இனிது-உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினுங் காமம் இன்பந்தருவதாயுள்ளது தலைமகளை மறவாமை கூறியவாறு. முன்பு கண்டார் மகிழ் செய்யும் (குறள்-1090) என்ற காமம் இங்குக் கருதினாலும் காமம் இங்குக் கருதினாலும் மகிழ் செய்யும் என்று கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலி காதலனை நினைத்துப் புலம்புகிறாள்;) மனத்தில் நினைத்தாலும் ஓயாத நல்ல மகிழ்ச்சியை உண்டாக்குவதால் கள்ளை உண்டு வருகிறகளிப்பைவிடக் காமத்தை நினைத்து வருகிற களிப்பு மேலானது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிரிந்திருக்கும்போது முன்பு கூடிய இன்பத்தினை நினைத்தாலும் அது அப்போது பெற்றதுபோல இருக்கின்றது. ஆதலால் நினைத்தாலும் மகிழ்ச்சியைத் தரும் காமம், உண்டால் அல்லாமல் மகிழ்ச்சி செய்யாத கள்ளினை விட இன்பம் கொடுப்பதாகும்.
தமிழ்க்குழவி உரை:
மது, அருந்தினால் தான் மகிழ்ச்சி தரும். ஆனால் காதல் உணர்வு நினைத்துப் பார்த்தாலே பெருமகிழ்ச்சி தருகிறது. மதுவினும் காதல் இனியது.
Translation
From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings.
Explanation
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
Transliteration
Ullinum Theeraap Perumakizh Seydhalaal Kallinum Kaamam Inidhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1201